search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்"

    • மோட்டார்சைக்கிள்களை விட ஸ்கூட்டர் மாடல்கள் அதிக பிரபலம்.
    • வழக்கமான ஸ்கூட்டர்களை போன்ற தோற்றம் கொண்டிருக்கும்.

    இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரபலமடைந்து வருகின்றன. முன்னணி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச பிரான்டுகள் வரை தொடர்ச்சியாக எலெக்ட்ரிக் வாகனங்களை இந்திய சந்தையில் களமிறக்கி வருகின்றன. இதில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் இருசக்கர வாகனங்களில் மோட்டார்சைக்கிள்களை விட ஸ்கூட்டர் மாடல்கள் அதிக பிரபலம் அடைந்து வருகின்றன.

    அந்த வகையில், எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிரிவில் முன்னணியில் உள்ள டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்-ஐ உருவாக்கி வருவது அம்பலமாகி இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் குறைந்த விலையில் கிடைக்கும் என்றும் வழக்கமான ஸ்கூட்டர் மாடல்களை போன்ற தோற்றம் கொண்டிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

     

    இந்த ஸ்கூட்டரில் அகலமான டெயில் லைட், ஸ்விங்-ஆர்ம்-இல் மவுண்ட் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார், இடதுபுறம் ஷாக் அப்சார்பர் வழங்கப்படுகிறது. ஸ்கூட்டர் மட்டுமின்றி டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் புதிய எலெக்டிரிக் மோட்டார்சைக்கிளையும் டெஸ்டிங் செய்து வருகிறது.

    ஏற்கனவே சிம்பில் எனர்ஜி, டி.வி.எஸ்., பஜாஜ், ஒலா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்டிங் செய்து வருகின்றன. இவைதவிர ஹோண்டா நிறுவனமும் இந்த பிரிவில் களமிறங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், டார்க் மோட்டார்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    • வருடாந்திர விற்பனையில் 131 சதவீதம் வளர்ச்சி பதிவு செய்துள்ளது.
    • சுமார் 20 ஆயிரம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியில் இருந்து டிசம்பர் 21-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 647 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. அந்த வகையில் ஒரே ஆண்டிற்குள் 2.5 லட்சம் யூனிட்களை விற்பனை செய்த முதல் எலெக்ட்ரிக் இருசக்கர நிறுவனமாக உருவெடுத்தது.

    இதன் மூலம் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது வருடாந்திர விற்பனையில் 131 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஓலா நிறுவனம் 1 லட்சத்து 09 ஆயிரத்து 395 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஓலா நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சுமார் 20 ஆயிரம் யூனிட்களை விற்பனை செய்து வருகிறது.

     


    இந்த ஆண்டு ஜனவரியில் 18 ஆயிரத்து 353 யூனிட்களை விற்பனை செய்த நிலையில், மார்ச் மாதத்தில் 21 ஆயிரத்து 434 யூனிட்களை ஓலா எலெக்ட்ரிக் விற்பனை செய்தது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் அதிகபட்சம் 29 ஆயிரத்து 898 யூனிட்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் 12 மாதங்கள் வரையிலான காலக்கட்டத்தில் ஓலா எலெக்ட்ரிக் சந்தை மதிப்பு 30.50 சதவீதமாக இருக்கிறது.

    ஓலா தவிர்த்து டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் 1 லட்சத்து 62 ஆயிரத்து 399 யூனிட்களையும், ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 1 லட்சத்து 01 ஆயிரத்து 490 யூனிட்களையும் விற்பனை செய்துள்ளன. இவற்றின் சந்தை மதிப்பு முறையே 19.60 மற்றும் 12.30 ஆக உள்ளது. 

    • ஸ்கூட்டர் வாங்குவோருக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது.
    • மிகக் குறைந்த வட்டியில் கடன் சலுகைகள் வழங்கப்படுகிறது.

    ஹீரோ மோட்டோகார்ப்-இன் எலெக்ட்ரிக் வாகன பிரிவு "விடா" எனும் பெயரில் இயங்கி வருகிறது. மேலும் விடா பிராண்டின் V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஆண்டு இறுதியை ஒட்டி சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவை இம்மாத இறுதி வரை வழங்கப்படுகிறது. இதில் ரொக்க பலன்கள், வாரண்டி மற்றும் பல்வேறு பலன்கள் வழங்கப்படுகின்றன.

    அதன்படி விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவோருக்கு ரூ. 8 ஆயிரத்து 259 மதிப்புள்ள நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 6 ஆயிரத்து 500 தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ், ரூ. 7 ஆயிரத்து 500 வரை லாயல்டி பலன்கள் வழங்கப்படுகின்றன.

     


    ஹீரோ மோட்டோகார்ப் அல்லது விடா வாடிக்கையாளர்களின் குடும்பத்தாருக்கு மட்டுமே லாயல்டி பலன்கள் பொருந்தும். இத்துடன் ரூ. 2 ஆயிரத்து 500 வரை கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் வாடிக்கையாளர்களுக்கு 5.99 சதவீதம் எனும் மிகக் குறைந்த வட்டியில் கடன் சலுகைகள் வழங்கப்படுகிறது.

    விடா V1 ஸ்கூட்டரை மாத தவணையில் வாங்கும் போது இதர கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. மாத தவணையாக மாதம் ரூ. 2 ஆயிரத்து 429-இல் இருந்து வாங்கிட முடியும். நிதி சார்ந்த பலன்களை வழங்குவதற்காக விடா பிராண்டு ஐ.டி.எஃப்.சி., இகோஃபை மற்றும் ஹீரோ ஃபின்கார்ப் போன்ற நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது.

    இந்திய சந்தையில் விடா V1 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 26 ஆயிரம் என துவங்குகிறது. விடா V1 ப்ரோ மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 46 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. 

    • 60 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை வாரண்டி வழங்கப்படுகிறது.
    • ஏத்தர் நிறுவனம் டிசம்பர் மாத சலுகைகளை அறிவித்துள்ளது.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டிசம்பர் மாத சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ. 24 ஆயிரம் வரையிலான தள்ளுபடி மற்றும் பலன்கள் வழங்கப்படுகின்றன.

    இதில் ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 1500 வரை கார்ப்பரேட் பலன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ரூ. 12 ஆயிரம் வரையிலான சேமிப்புகள் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வேறுப்படும். "ஏத்தர் ப்ரோடெக்ட் டி.எம்." பெயரில் நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது. இதில் 5 ஆண்டுகள் அல்லது 60 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை வாரண்டி வழங்கப்படுகிறது.

     


    ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் இந்திய இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் தங்களது மாடல்களுக்கு சலுகைகளை வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அந்த வகையில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் டிசம்பர் மாத சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

    டிசம்பர் மாத சலுகைகள் தவிர ஏத்தர் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய 450X அபெக்ஸ் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது ஏத்தர் இதுவரை அறிமுகம் செய்ததிலேயே விலை உயர்ந்த மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    • இந்த ஸ்கூட்டர் 104 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.
    • கைனெடிக் ஜூலு மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் வழங்கப்படுகிறது.

    இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் அதிக பிரபல மாடல்களான லூனா மற்றும் கைனெடிக் ஹோண்டா ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்த கைனெடிக் கிரீன் இந்தியாவில் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. கைனெடிக் ஜூலு (Zulu) என அழைக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அந்நிறுவனத்தின் நான்காவது மாடல் ஆகும்.

    ஹப் மோட்டார் மூலம் இயங்கும் கைனெடிக் ஜூலு 2.1 கிலோவாட் பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 60 கிலோமீட்டர்கள் வரையிலான வேகத்தில் செல்லும். இந்த மாடலில் 2.27 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரி முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 104 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ளது.

    எனினும், போக்குவரத்து மிக்க சாலைகளில் இந்த ஸ்கூட்டர் அதிகபட்சம் 75 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். அந்த வகையில், இந்த மாடல் அன்றாட பயன்பாட்டுக்கு ஏற்ற வாகனமாக இருக்கும்.

    கைனெடிக் ஜூலு மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், டுவின் ஷாக் அப்சார்பர்கள், இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள், 10 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் எல்.சி.டி. யூனிட், எல்.இ.டி. டி.ஆர்.எல். வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய கைனெடிக் ஜூலு மாடலின் விலை ரூ. 94 ஆயிரத்து 490, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை 3.3 நொடிகளில் எட்டிவிடும்.
    • உலகத்தரம் வாய்ந்த செயல்திறனை வெளிப்படுத்தும்.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 450 அபெக்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படுகிறது. டீசரின் படி இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிவேக செயல்திறன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    புதிய ஏத்தர் ஸ்கூட்டரின் பெயர் "அபெக்ஸ்" என்று சூட்டப்பட்டு இருப்பதை ஒட்டி, இந்த மாடல் குறைந்த நேரத்தில் அதிவேகமாக செல்லும் திறன் கொண்டிருக்கலாம் என தெரிகிறது. தற்போது ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விற்பனை செய்து வரும் ஏத்தர் 450X மாடல் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை 3.3 நொடிகளில் எட்டிவிடும்.

     

    அந்த வகையில் புதிய ஏத்தர் 450 அபெக்ஸ் மாடல் உலகத்தரம் மிக்க செயல்திறனை வெளிப்படுத்தும் என்று தெரிகிறது. இந்த ஸ்கூட்டர் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், அடுத்த சில வாரங்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம். 

    • புதிய ஸ்கூட்டர் அளவில் பெரியதாக இருக்கும்.
    • மனதில் வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களை ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் இணை நிறுவனரும், மூத்த நிர்வாக அதிகாரியுமான தருன் மேத்தா உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்றும் தெரிவித்தார்.

    இது தொடர்பான எக்ஸ் பதிவில், "புதிய ஸ்கூட்டர் அளவில் பெரியதாக இருக்கும் என்றும், அது குடும்ப பயன்பாட்டுக்கான ஒன்றாக இருக்கும் என்றும் இது ஒட்டுமொத்த குடும்பத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது," என்று அவர் தெரிவித்துள்ளார்.

    தற்போது ஏத்தர் எனர்ஜி விற்பனை செய்து வரும் 450 சீரிசை தழுவியே புதிய மாடலும் உருவாக்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், புதிய ஏத்தர் 450 சீரிஸ் தலைசிறந்த செயல்திறன் வழங்குவதில் சிறப்பான மாடலாக அறியப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    "அந்த மாடலில் ரைடிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்பான அம்சங்கள் வழங்கப்படும்," என்று அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார். இந்த மாடலின் விற்பனை அடுத்த ஆண்டு துவக்கத்தில் துவங்கலாம் என்றும் இதன் விலை சற்று அதிகமாக இருந்தாலும், அது கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற அம்சங்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    • தருன் மேத்தா புதிய ஸ்கூட்டருக்கான டீசர்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார்.
    • ஏத்தர் சீரிஸ் 1 ஸ்கூட்டரில் டிரான்ஸ்லூசென்ட் பேனல்கள் வழங்கப்பட்டு இருந்தன.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சீரிஸ் 2 பெயரில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. இந்த மாடலில் கண்ணாடி போன்ற தோற்றம் கொண்ட டிரான்ஸ்பேரண்ட் பாடி பேனல்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    இதே தகவலை உறுதிப்படுத்தும் வகையில் ஏத்தர் எனர்ஜி தலைமை செயல் அதிகாரி தருன் மேத்தா புதிய ஸ்கூட்டருக்கான டீசர்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார். முன்னதாக ஏத்தர் சீரிஸ் 1 ஸ்கூட்டரில் டிரான்ஸ்லூசென்ட் பேனல்கள் வழங்கப்பட்டு இருந்தன. இவற்றை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கலெக்டர்ஸ் எடிஷன் என்று அழைத்தது.

    தற்போதைய தகவல்களின் படி ஏத்தர் சீரிஸ் 2 மாடலிலும் தற்போதைய 450 மாடலில் உள்ள மோட்டார், ஹார்டுவேர், டிசைன், பேட்டரி மற்றும் அம்சங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. ஏத்தர் 450s, ஏத்தர் 450X (2.9 கிலோவாட் ஹவர்), 450X (3.7 கிலோவாட் ஹவர்) மாடல்களை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

    • எலெட்ரா மாடலில் 12 இன்ச் அளவில் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
    • இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 110 கி.மீ. வேகத்தில் செல்லும்.

    லம்ப்ரெட்டா பிராண்டின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் 2023 EICMA நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்தாலியில் நடைபெறும் EICMA விழாவில் அறிமுகமான லம்ப்ரெட்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எலெட்ரா என்று அழைக்கப்படுகிறது.

    புதிய லம்ப்ரெட்டா எலெட்ரா மாடலின் புகைப்படங்களின் படி, இதன் வெளிப்புற தோற்றம் அதன் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. எனினும், இதில் அதிநவீன டிசைனிங் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஸ்டீல் ஃபிரேம் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் எலெட்ரா மாடலில் 12 இன்ச் அளவில் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

     

    இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 4 கிலோவாட் மற்றும் 11 கிலோவாட் திறன் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இதில்- இகோ, ரைடு மற்றும் ஸ்போர்ட் என மூன்றுவிதமான ரைடு மோட்கள் உள்ளன. முழு சார்ஜ் செய்தால் இந்த ஸ்கூட்டர் 130 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும்.

     

    தற்போது கான்செப்ட் வடிவில் இருக்கும் லம்ப்ரெட்டா எலெட்ரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்போது உற்பத்திக்கு வரும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. மேலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகள் குறைவுதான்.

    • இதில் 2.9 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த ஸ்கூட்டர் 108 கிலோமீட்டர்கள் வரை ரேன்ஜ் வழங்குகிறது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குகிறது. இதன் மூலம் செட்டாக் ஸ்கூட்டரின் விலை ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் என்று மாறிவிடும். இந்த சலுகை தமிழ்நாடு மற்றும் கர்நாடகா என இரண்டு மாநிலங்களில் மட்டுமே பொருந்தும். இதன் காரணமாக மற்ற மாநிலங்களில் செட்டாக் ஸ்கூட்டர் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    இந்த சலுகை மற்றும் தள்ளுபடி ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படுகிறது. செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் பஜாஜ் நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் களமிறங்கியது. தற்போது இந்த மாடல் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதில் 2.9 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 108 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இதில் உள்ள பேட்டரியை ஐந்து மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். இந்த வேரியண்ட் தவிர பஜாஜ் நிறுவனம் சற்றே குறைந்த விலையில் புதிய செட்டாக் ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏத்தர் நிறுவன ஸ்கூட்டர் மாடல்களுக்கு பண்டிகை கால சலுகைகள் வழங்கப்படுகிறது.
    • பண்டிகை கால சலுகைகள் குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி எக்சேன்ஜ், கார்ப்பரேட் மற்றும் பண்டிகை கால சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    வாடிக்கையாளர்கள் ஏத்தர் 450X (2.9 கிலோவாட் ஹவர், 3.7 கிலோவாட் ஹவர்) மற்றும் ஏத்தர் 450S (2.9 கிலோவாட் ஹவர்) மாடல்களை வாங்கும் போது எக்சேன்ஜ் முறையில் ரூ. 40 ஆயிரம் வரை தள்ளுபடி பெற முடியும். எனினும், இந்த தொகை வாடிக்கையாளர்கள் எக்சேன்ஜ் செய்யும் பெட்ரோல் இருசக்கர வாகனத்தின் நிலை, வயது மற்றும் வாங்கும் போது அதன் உண்மையான விலை உள்ளிட்டவைகளை பொருத்து நிர்ணயம் செய்யப்படும்.

     

    ஏத்தர் 450S மாடலுக்கு பண்டிகை கால பலனாக ப்ரோ வெர்ஷனுக்கு ரூ. 5 ஆயிரமும், கார்ப்பரேட் பலனாக ரூ. 1500 வழங்கப்படுகிறது. ஏத்தர் 450X மாடலுக்கும் இதேபோன்ற கார்ப்பரேட் சலுகை வழங்கப்படுகிறது. 24 மாதங்களுக்கு மாத தவணையை பயன்படுத்தும் போது 5.99 சதவீத வட்டி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இந்த சலுகைகள் அனைத்தும் நவம்பர் 15-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

    புதிய சலுகைகளின் கீழ் எக்சேன்ஜ் முறையில் முழுமையான தள்ளுபடி பெறும் போது ஏத்தர் 450S விலை ரூ. 86 ஆயிரத்திற்கும், 450X விலை ரூ. 1 லட்சத்திற்கும் குறைந்து விடும். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • டெஸ்டிங் செய்யப்படும் மாடல் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறது.
    • பஜாஜ் நிறுவனத்தின் சன்னி 60சிசி 2-ஸ்டிரோக் ஸ்கூட்டர் விற்பனையில் இருந்து வந்தது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது மிகவும் பிரபல ஸ்கூட்டர் பிராண்டு, சன்னி-யை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர இருப்பதாக தெரிகிறது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ப்ரோடோடைப் மாடல் பூனே அருகில் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

    புகைப்படங்களின் படி பஜாஜ் நிறுவனம் சன்னி ஸ்கூட்டரை எலெக்ட்ரிக் வடிவில் உருவாக்கி இருப்பதாக தெரிகிறது. டெஸ்டிங் செய்யப்படும் மாடல் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதன் ஒட்டுமொத்த ஸ்டைலிங் மற்றும் பாடி பேனல்கள் சன்னி ஸ்கூட்டரை போன்றே காட்சியளிக்கின்றன.

     

    இந்திய சந்தையில் பஜாஜ் நிறுவனத்தின் சன்னி 60சிசி 2-ஸ்டிரோக் ஸ்கூட்டர் பல ஆண்டுகளாக விற்பனையில் இருந்து வந்தது. தற்போது பஜாஜ் ஆட்டோ நிறுவனம் செட்டாக் ஸ்கூட்டரை மட்டுமே இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்த மாடல் பிரீமியம் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது.

    அதன்படி பஜாஜ் நிறுவனம் புதிய சன்னி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டுவரலாம் என்று தெரிகிறது. தற்போதைய தகவல்களில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 1 லட்சத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என்றே கூறப்படுகிறது.

    Photo Courtesy: Autocarindia

    ×